எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், ஒரு காவலர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கரின் நாராயண்பூர் - தண்டேவாடா மாவட்டங்களின் வனப்பகுதியான அபுஜ்மார் வனப்பகுதியில் உலவும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் மாலை (ஜன. 4) ஈடுபட்டனர். சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் வன பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து நேற்று தகவல் வெளியிட்டுள்ள பஸ்தர் பகுதியின் ஐஜி சுந்தர்ராஜ், "மோதலில் 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில், வன பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமை காவலர் சன்னு கரம் என்பவர் உயிரிழந்தார். நக்ஸல் சீருடையில் இருந்த நான்கு நக்சலைட்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ஏ.கே.-47 துப்பாக்கி மற்றும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


