எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம் : மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தின் 4-வது யூனிட்டில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர் பழைய அனல் மின் நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுக்களுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 3-வது யூனிட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த யூனிட்டில் நடைபெற்று வந்த 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது.
இந்த நிலையில் 4-வது யூனிட்டில் 2 நாட்களுக்கு முன்பு கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுதை சீரமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது இந்த பணி முடிவடைந்தது. இதையடுத்து 4-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
அதாவது விபத்து ஏற்பட்ட 3-வது யூனிட் தவிர மற்ற 3 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகாவாட் மின் உற்பத்தியை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


