Idhayam Matrimony

அரினா சபலென்கா சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      விளையாட்டு
Aryna-Sabalenka 2025-01-03

Source: provided

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் போலினா குடெர்மெடோவா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் சபலென்கா இழந்தார்.

இதையடுத்து சுதாரித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போலினா குடெர்மெடோவாவை வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

____________________________________________________________________________________

இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விஷ்வா பெர்னண்டோ 56 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  

இதனையடுத்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - வில் யங் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரச்சின் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சாப்மேன் நிதானமாக விளையாட, வில் யங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். வெறும் 26.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்த நியூசிலாந்து 180 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. வில் யங் 90 ரன்களுடனும், சாப்மேன் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மேட் ஹென்ரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து