Idhayam Matrimony

இந்தியாவில் பரவியது எச்.எம்.பி.வி. வைரஸ்: 3 குழந்தைகளுக்கு தொற்றை உறுதி செய்தது மத்திய அரசு

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      இந்தியா
hmpv 2025-01-06

Source: provided

புதுடெல்லி: சீனாவை அடுத்து தற்போது இந்தியாவில் பரவியுள்ளது எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு. கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கும், குஜராத்தில் 1 குழந்தைக்கும் இந்த தொற்றை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது குளிர்காலத்தில் சகஜம் தான் என அரசு கூறினாலும் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. சீனாவில் வைரஸ் பரவலால் மற்ற நாடுகளும் அலர்ட்டாக உள்ளன. இந்தியாவில் உள்ள கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு தீவிர கண்காணிப்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி.) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை எங்கும் அழைத்துச் செல்லப்படாதபோதிலும் வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பை உறுதி செய்த தனியார் மருத்துவமனை அறிக்கையை கர்நாடக மாநில சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது. மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குஜராத்தில் எச்.எம்.பி.வி. பரவல் பதிவாகியுள்ளது. சந்த்கேடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி. பாதிப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சுவாச நோய்களை, கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாள இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது, இந்த தொற்று பாதிப்புகளில், அசாதாரண பரவல் என்பது இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. கடந்த சனிக்கிழமை கூட்டு கண்காணிப்புக் குழு கூட்டமும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து