Idhayam Matrimony

கவர்னரை திட்டமிட்டு வெளியேற்றியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      தமிழகம்
EPS 2024-04-10

Source: provided

சென்னை: பேரவையிலிருந்து கவர்னர் வெளியேறவில்லை, திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. ஆங்கில புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தனது உரையுடன் கவர்னர் ஆா்.என்.ரவி தொடங்கி வைப்பதற்காக வருகை தந்தார். வழக்கம் போல பேரவைக் கூடியதும், கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்பட்டதும் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென, கவர்னர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவையிலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, பேசுகையில், தமிழ்நாடு சட்டபேரவையை கவர்னர் புறக்கணித்துச் செல்லவில்லை. திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர். கவர்னரை உரையாற்றக் கூடதென்று திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து