Idhayam Matrimony

தமிழக சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்? சபாநாயகர் அப்பாவு தகவல்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      தமிழகம்
Appavu 2023-09-12

Source: provided

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் கவர்னர் உரை மீதான விவாதம்  8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.

கவர்னர் உரையுடன் நேற்று சட்டபேரவை கூடியது, அதன் தொடர்ச்சியாக அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்து 4 நாள்கள் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. வருகிற 11-ம் தேதி வரை நடைபெறும். கவர்னர் உரை மீதான விவாதம்  8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 11-ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி நிறைவு செய்வார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து