எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் எல்லை விரிவாக்கம் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்க ஆறு வாரங்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லையை விரிவாக்கம் செய்து தமிழக அரசு மறுசீரமைப்பு மேற்கொள்ள உத்தேசப்பட்டியல் தயாரித்துள்ளது. இதன்படி மாநகராட்சி பகுதிகளை ஒட்டிய பஞ்சாயத்துக்கள் சிலவற்றை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நகராட்சி பகுதிகளில் உள்ள சில பஞ்சாயத்துகள் அந்தந்த நகராட்சிகளுடன் இணைய உள்ளது. மொத்தத்தில் 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகள் இணைய இருக்கிறது. இதுதவிர புதிதாக 13 நகராட்சிகள் உருவாக உள்ளது. இதற்கு பல ஊராட்சிகளில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனாலும் இதுதொடர்பாக 5 அரசாணைகளை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணைகளை அரசிதழில் வெளியிட்டுள்ள தமிழக அரசு இதுதொடர்பான ஆட்சேபனைகளை 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதன்படி முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தலைமை செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை என்ற முகவரிக்கு ஆட்சேபனைகளை அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


