எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக பும்ரா செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருநாள் தொடரில்....
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டம் காரணமாக ஏராளான மாற்றங்கள் அரங்கேற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்துவிட்ட நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இது பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. எனினும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது.
கேப்டன் ரோகித்...
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துவது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் யார் என்ற கேள்வு எழுந்துள்ளது. இது குறித்து வெளியான தகவல்களில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பும்ராவுக்கு ஓய்வு...
முன்னதாக இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி விவரங்களை பி.சி.சி.ஐ. விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


