Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிக்க திட்டம் : விரைவில் பேச்சுவார்த்தை

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2025      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

லண்டன் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இரண்டு பிரிவாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தை...

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும்.

இம்மாத இறுதியில்...

ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் மைக் பெய்ர்ட் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் ரிச்சர்ட் தாம்ப்சன் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

150-வது ஆண்டு... 

ஒருவேளை இந்த திட்டம் ஏற்கப்படும் பட்சத்தில், தற்போது வரை திட்டமிடப்பட்டு இருக்கும் கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெறும் வரை செயல்பாட்டுக்கு வராது. அந்த வகையில், 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறு நாடுகள் விளையாடும் கிரிக்கெட் தொடர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதே ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டியின் 150-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் போட்டி நடைபெற இருக்கிறது.

தொடர்ச்சியாக கருத்து... 

உலகில் முன்னணியில் உள்ள அணிகள் அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்திய அணியின் மூத்த வீரர் ரவி சாஸ்திரியும், இத்தகைய கருத்தை தெரிவித்து இருந்தார். 

முன்னதாக பேச்சு...

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்தர பட்டியலில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்று இருக்கலாம். இதேபோல், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இரண்டாம்கட்ட பட்டியலில் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற திட்டத்தை கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்தது. இத்தகைய திட்டம், எங்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் என்று சிறிய நாடுகளை சேர்ந்த அணிகள் முறையிட்டதால், இந்த திட்டம் பேச்சுவார்த்தை கட்டத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து