Idhayam Matrimony

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் முகக்கவசம் கட்டாயம் : கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      தமிழகம்
Mask 2025-01-06

Source: provided

உதகமண்டலம் : நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 2 பேர் எச்எம்பி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று முன்தினம் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்த் தொற்றால் உடலில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், நோய்ப் பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகள் இருவருக்கு எச்எம்பி தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக எல்லையையொட்டி நீலகிரி மாவட்டப் பகுதிகள் அமைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து