எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: யார் அந்த சார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் நேற்று முதல் முறையாக விளக்கம் அளித்தார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரை உச்சரித்து, பல்கலைக்கும், அண்ணாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்புப் விசாரணைக் குழுதான் விசாரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்துள்ளது மாபெரும் கொடூரம்.இதனை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து எம்எல்ஏக்கள் பேசியிருக்கிறீர்கள். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று, நியாயம் பெற்றுத் தருவதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை இங்கே தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.
பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானதுக்கு தமிழக அரசு காரணமில்லை. மத்திய அரசின் கீழ் இருக்கும் துறைதான் காரணம். தொழில்நுட்பக் கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்து காவல்துறைதான், உடனடியாக மத்திய அரசின் துறைக்குத் தெரிவித்து தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவ்வப்போது யார் அந்த சார் என்று கேட்கிறீர்கள். உங்களிடம் யார் அந்த சார் என்பது குறித்து ஆதாரம் இருந்தால் உடனடியாக உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவிடம் அதனை அளிக்கலாம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


