Idhayam Matrimony

கோரிக்கை வைக்க உரிமை இல்லை: கவர்னரின் செயலுக்கு கண்டனம்: சட்டசபையல் சபாநாயகர் தகவல்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
Appavu--1

Source: provided

சென்னை: கோரிக்கை வைக்க கவர்னருக்கு உரிமை இல்லை என்றும் கவர்னரின் செயலை சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்து பேசியதாவது:- சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேற அதிமுகவினரே காரணம். கவர்னருக்கு எதிராக, அ.தி.மு.க.வினர் பதாகைகளுடன் வந்தனர். எழுதி கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை, கோரிக்கை எதுவும் வைக்க முடியாது.

கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். கவர்னரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க கவர்னருக்கு உரிமை இல்லை. கவர்னர் உரையின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் வெட்டி, ஒட்ட முயற்சி நடந்தது. 

வெட்டி, ஒட்டுவார்கள் என முன்கூட்டியே கண்டுபிடித்ததால் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை தரப்படவில்லை. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை கொடுக்க கவர்னர் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. தமிழக மக்களை கவர்னர் ஆர்.என்.ரவி அவமதித்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து