Idhayam Matrimony

நகர்ப்புறங்களுடன் கிராம ஊராட்சிகளை இணைப்பது குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம் சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊரக உள்ளாட்சிகளை இணைப்பது குறித்து கருத்து தெரிவிக்க 120 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன்,  கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளை இணைக்கும் திட்டத்தில், நலத்திட்டங்கள் கிடைக்காது என்ற அடிப்படையில் கிராமங்களே ஒன்று திரண்டு அரசுக்கு மனுக்களை தருகின்றனர். இதை நிறுத்தி வைக்க முதல்வருடன் கலந்து பேசி நல்ல தீர்வை அமைச்சர் காண வேண்டும்  என்றார்.

இதற்கு, அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில்:  தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைப்பது, பேரூராட்சிகளாக உருவாக்குவது என்பது வெறும் 371 ஊராட்சிகள் மட்டும் தான். அதில் கூட, 120 நாட்கள் நேரம் அளிக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இருந்தால் அதை மாவட்ட ஆட்சியரிடம் கூறி, அவர்கள் மூலம் அரசுக்கு அனுப்பினால், எந்த ஊரை சேர்க்கலாம், கூடாது என்பதை முடிவெடுக்கலாம். எந்த பகுதியிலும், மாநகராட்சியுடன் இணைப்பதற்கு பிரச்சினை செய்வதில்லை.

புதிய பேரூராட்சி தொடங்கப்பட்டால், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் என்பதால் எதிர்க்கப்படுகிறது. பல ஊராட்சிகளில் விளைநிலங்கள் இல்லாத இடங்களை மட்டுமே நகராட்சியுடன் இணைக்கிறோம். குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 371 ஊாராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுகிறது. அதிலும் விருப்பமில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், மீண்டும் பரிசீலிக்கப்பட்டு முதல்வரிடம் கலந்து பேசி தக்க முடிவெடுக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து