Idhayam Matrimony

சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு திபெத்தில் 515 அதிர்வுகள் பதிவு

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      உலகம்
Earthquack 2024-12-06

Source: provided

பீஜிங் : திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு 515 அதிர்வுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் காயமடைந்துள்ளனர் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, திபெத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 515 அதிர்வுகள் பதிவானதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. சீன மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (நேற்று) காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 515 அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதில் 488 அதிர்வுகள் 3.0 ரிக்டர் அளவுக்கு கீழும், 27 அதிர்வுகள் 3.0 ரிக்டர் அளவிலும், 24 அதிர்வுகள் 3.0 முதல் 3.9 வரையிலான ரிக்டர் அளவிலும், 3 அதிர்வுகள் 4.0 முதல் 4.9 வரையிலான ரிக்டர் அளவிலும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து