எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜன. 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூரு- தூத்துக்குடி, பெங்களூரு - சென்னை, எர்ணாகுளம் - சென்னைக்கு இரு வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு - சென்னை இடையே ஜன. 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில் (07319) பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். அன்றைய தினம் சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் ரயில்(07320) இரவு 10.50-க்கு பெங்களூருவை சென்றடையும்.
பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரயில்(06569) ஜன. 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜன. 11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ஜன. 12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும்.
எர்ணாகுளம் - சென்னை சிறப்பு ரயில் (06569) ஜன. 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15 -க்கு புறப்படும் ரயில் (06046) மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8.30 க்கு சென்னையை அடையும். மறுமார்க்கமாக ஜன. 17 (வெள்ளிக்கிழமை) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில்(06047) இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரயில்(06569) ஜன. 15 ஆம் தேதி( புதன்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து காலை 4.25 -க்கு புறப்படும் ரயில்(06058) அன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக ஜன. 16 (வியாழக்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்(06047) இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


