எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் அ.தி.மு.க. ஆதரவோடு ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக கவர்னர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான கவர்னரே முடிவு செய்வார், கவர்னர் பரிந்துரைப்பவரே தேடுதல் குழுவின் தலைவராகவும், யுஜிசி, பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர்களே உறுப்பினர்களாக ஆக முடியும் என யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கவர்னர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்து தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவளிப்பதாக தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் அந்த தனித் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
யு.ஜி.சி.யின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டின் உயர்கல்வி முறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக யு.ஜி.சி.யின் புதிய விதிகள் அமைந்துள்ளன. கல்வியையும், மக்களையும், எதிர்கால தலைமுறையையும் காக்க இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தன்னிச்சையாக துணைவேந்தர்களை நியமிக்கலாம் எனக் கூறுவது சரியானது அல்ல.
கல்வித்துறையில் எதைச் செய்ய வேண்டுமோ அதை மத்திய அரசு செய்வதில்லை. அரசு பொதுத்தேர்வு என்ற பெயரில் அனைவரையும் வடிகட்டி கல்வி கற்க விடாமல் செய்கின்றனர். நீட் தேர்வு மூலம் மருத்துவக் கனவை சிதைக்கும் வேலையை செய்து வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆள் மாறாட்டம், வினாத்தாள் லீக் என குளறுபடி நடப்பதில் நம்பர் ஒன் தேர்வு நீட்தான்.
துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடம் கொடுப்பது பல்கலைக்கழகங்களை சிதைக்கும் முயற்சி. யு.ஜி.சி.யின் அறிவிப்பு கூட்டாட்சிக்கு எதிரானது; மாநில அரசை சிறுமைப்படுத்தும் செயல். மாநில அரசின் கல்வி நிலையங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. பேரவை தீர்மானத்தைப் பார்த்து மத்திய அரசு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


