எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் துவக்கி வைத்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முதல் வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில் , சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர் பிரியா, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்பு உள்ளது.
இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட உள்ளது. நேற்று முதல் 13-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் தொகுப்புக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு தரப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


