எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஈரோடு: இடைத்தேர்தல் தேதி அறிவிப்பால் தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஆனதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பை வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஈரோடு சட்டசபை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப் 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 7-ம் தேதி முதல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் கரும்பு, அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்களை ஏற்கெனவே பெற்றிருந்த மக்கள் நியாய விலைக் கடைகளுக்கு நேற்று காலை வந்திருந்தனர். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்து மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசானது ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் ஒட்டப்பட்டு இருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


