எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பதி: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
திருப்பதி கோவிலில் நேற்றிமுன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர வருவாய்த் துறை அமைச்சர் அங்கானி சத்ய பிரசாத் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அப்போது அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தபோது, திடீரென முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கண்மூடித்தனமாக அதைநோக்கி ஓடியபோது கீழே விழுந்தவர்களை மிதித்துக்கொண்டு மக்கள் ஓடியதில் 6 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். முன்னதாக, சம்பவ இடத்தில் ஆய்வு செய்த ஆந்திர மாநில அமைச்சர் அங்கானி சத்ய பிரசாத் கூறுகையில், நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளோம். இது மிகவும் சோகமான சம்பவம், உயிரிழப்பை ஈடுசெய்ய முடியாது, ஆனால், அவர்களது குடும்பத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பக்தர்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்ததும். பலியானவர்களின் உடல்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு, ஆந்திர முதல்வர் நேற்று நேரில் நலம் விசாரித்தார்.
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு விஷ்ணு நிவாசம் அருகே இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. வரிசையில் இருந்த பக்தர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை வெளியேற்றுவதற்காக நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இதுபற்றி தெரியாமல், வரிசையில் இருந்த பக்தர்கள் நுழைவு வாயிலுக்குள் ஒரே நேரத்தில் ஏராளமானோர் நுழைய முயன்றதால்தான் இந்த சம்பவம் நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை இரவு 8 மணி அளவில் இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ருயா மற்றும் எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 6 பேர் பலியாகினர். இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 5 பெண்கள் அடங்குவர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


