Idhayam Matrimony

கோவிலின் புனிதம் கெட்டுவிடக்கூடாது: திருப்பதி கோவில் பணியாளர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      இந்தியா
Chandrababu-Naidu 2023-09-2

Source: provided

திருப்பதி: கோவிலின் புனிதம் கெட்டுவிடக்கூடாது என்று திருப்பதி கோவில் பணியாளர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இலவச தரிசன டிக்கெட்டை பெற  நேற்று முன்தினம் இரவு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர்.

அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதிக்கு அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்களிடம் நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;

"கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கோவிலின் புனிதம் கெட்டுவிடாத அளவுக்கு பணியாளர்கள் செயல்பட வேண்டும்." என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து