Idhayam Matrimony

பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      தமிழகம்
Tamilnadu-Assemble 2024-12-02

Source: provided

சென்னை: பவானிசாகர் அணையில் இருந்து 12,000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு 12,000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் மே 1-ம் தேதி வரை தண்ணீர் திறப்பு மற்றும் தண்ணீர் நிறுத்தம் முறையில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், நம்பியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து