Idhayam Matrimony

சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாளாளர் உள்பட 3 பேருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
chennai-high-court 2025-01-01

Source: provided

சென்னை: விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  பலியான சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்துக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

விக்கிரவாண்டியைச் சேர்ந்த பழனிவேல் மகள் லியாலட்சுமி (4). இவர், அங்குள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி.படித்து வந்தார். கடந்த 3-ஆம் தேதி மதியம் உணவு இடைவேளையின் போது சக மாணவ, மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த லியாலட்சுமி, பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து பள்ளித் தாளாளர் எமல்டா, முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய மூவரையும் கைது செய்தனர். உடல்நலக் குறைவால் தாளாளர், முதல்வர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆசிரியை மட்டும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற முதன்மை அமர்வு கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது. வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். மேலும்  பலியான சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்துக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகியோர் ரூ.5 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து