எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புணே : சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு புணே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு புணே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக இந்த வழக்கு புணே சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி காணொளி மூலம் ஆஜரானார். அப்போது அவருக்கு ரூ.25,000 உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
இதுகுறித்து ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலிந்த் பவார், ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது என்று கூறினார். அதேசமயம் இந்த வழக்கு பிப்ரவரி 18 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார். கடந்த 2023ல் லண்டனில் பேசிய ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது புணே நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் இந்த வழக்கு எம்.பி., மற்றும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


