எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சுய உதவிக் குழுக்களின் நிர்வாகத்திறனையும், நிதி மேலாண்மை திறனையும் மேம்படுத்துவதற்காக மின்கற்றல் தள அடிப்படையில் ''மின்மதி 2.0" கைபேசி செயலியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிர்வாக மேலாண்மை, நிதி மேலாண்மை உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், உருவாக்கப்பட்டுள்ள "மின்மதி 2.0" கைபேசி செயலியை தொடங்கி வைத்து, புதிய வடிவமைப்பு மற்றும் மக்களை கவரும் உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் இதழினை வெளியிட்டார்.
பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக 1989-ல் முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சீரிய தலைமையிலான திராவிட மாடல் அரசினால் ஏற்றம் பெற்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான அடிப்படைப் பயிற்சிகள் நேரடியாக சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
சுய உதவிக் குழுக்களின் நிர்வாகத்திறனையும், நிதி மேலாண்மை திறனையும் மேம்படுத்துவதற்காக மின்கற்றல் தள அடிப்படையில் ''மின்மதி 2.0" கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக நிர்வாக மேலாண்மை, நிதி மேலாண்மை, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், சமுதாயம் சார்ந்த அமைப்புகள், அரசுத் திட்டங்கள் போன்ற தலைப்புகளில் உரிய பயிற்சிகளை கேட்பொலி மற்றும் காணொளி வழியாக வழங்கப்பட உள்ளது. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக தங்களுடைய கைபேசி மூலம் பல்வேறு தலைப்புகளில் தேவையான தகவல்களைக் காணவும், கற்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சமுதாய வளப் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும் இந்த செயலி மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளதுடன், தேர்வானவர்களுக்கு மின் சான்றிதழ் (E-Certificate) வழங்கும் வகையில் "மின்மதி 2.0" கைபேசி செயலி அமைக்கப்பட்டுள்ளது."மின்மதி 2.0" கைபேசி செயலியானது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் தனித்தனியாக செயல்படுத்தப்பட்டு வந்த மென்பொருட்கள் மற்றும் செயலிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த மின்னணு தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


