எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தைக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும், அந்த குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எச்எம்பி வைரஸ் தொற்று தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி. வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த குழந்தைக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவில் எச்.எம்.பி. வைரஸ் தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் குழந்தையின் பெற்றோருக்கு முன்னெச்சரிக்கையாக சுகாதார விழிப்புணர்வு அளிக்கப்பட்டதாகவும், ஜிப்மர் மருத்துவமனையில் சோதனை கருவிகள் தயாராக இருப்பதாகவும், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சோதனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரஸ் பரவல் குறித்து பீதியடைய தேவையில்லை என்றும், புதுச்சேரி கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனையில், எச்எம்பி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட முதியவர்களை அனுமதிக்க 10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான 6 படுக்கைகள் கொண்ட பிரத்யேக ஐ.சி.யூ. வசதியும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


