Idhayam Matrimony

நீட் ரத்து சினிமா பஞ்ச் டயலாக் கிடையாது: த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

சென்னை : நீட் ரத்து சினிமா பஞ்ச் டயலாக் கிடையாது என்று தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று பிரசாரம் செய்த தற்போதைய ஆட்சியாளர்கள், இப்போது, நீட் தேர்வை ரத்துசெய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது எனக்கூறி மக்களை ஏமாற்றி வருவதாக த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.

விஜய்யின் இந்த விமர்சனத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறியதாவது; "நீட் தேர்வு ரத்து என்பது நீண்ட நெடிய போராட்டம். இது தமிழக மக்களுக்கும் தெரியும். கலைஞர் ஆட்சிக்காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டது. 

அதன் பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறது. நீட் ரத்து என்பது மத்திய அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம். நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்துசெய்ய முடியும். சட்டம், நாட்டின் நடைமுறை, அரசின் நடைமுறை புரிந்தால்தான் இதுகுறித்து பேசமுடியும். சினிமாவில் யாரோ எழுதிக்கொடுத்து பேசப்படும் பஞ்ச் வசனத்தை பேசும் சூழல் கிடையாது." இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து