எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வீரர்களின் பட்டியலை அறிவிக்க ஐ.சி.சி.யிடம் பி.சி.சி.ஐ., கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது.
பாகிஸ்தானில்...
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன.
இன்றைக்குள்...
பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகளை இன்றைக்குள் அறிவிக்க வேண்டும் என 8 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கும் ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களின் பட்டியலை வெளியிட தயாராக இல்லை என தெரிகிறது. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) கோரிக்கை வைத்துள்ளது.
தாமதமாகலாம்...
இதனால் இந்திய அணி அறிவிப்பு தாமதமாகலாம் எனத் தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்தியா இங்கிலாந்து அணிக்கெதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அணியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணியில் இடம் பெறும் பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்திய அணி குறித்த அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


