எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மகா கும்பமேளாவை முன்னிட்டு நெல்லையில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது. இது மகா கும்பம் - 2025 என்ற பெயரில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நெல்லையில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக விஜயவாடா வழியாக 7-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு பனாரஸ் சென்றடைகிறது. இதையடுத்து 8,9,10-ந்தேதிகளில் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு செல்கின்றது.
இதை தொடர்ந்து 10-ந்தேதி அயோத்தியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு 13-ந்தேதி நெல்லை வந்தடைகிறது. இதில் ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, மூன்று 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள், 1 பேட்டரி கார், 2 பவர் கார்கள் என் மொத்தம் 14 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. மேலும் www.irctctourism.com என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


