எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் யாரென கெஜ்ரிவால் முடிவு செய்ய முடியுமா? இதுபோன்று கூறுவதற்கு அவர் யார்? என்று அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் 70 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக்கு பதிவு பிப்ரவரி 5-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதியும் நடைபெறும்.
இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், ஆம் ஆத்மி நிறுவனரான கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, பா.ஜ.க. தோல்வி பயத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது என கூறியுள்ளார்.
அத்துடன், மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட தெற்கு டெல்லியின் முன்னாள் எம்.பி.யான ரமேஷ் பிதூரியின் பெயர் டெல்லி சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.க.வில் இறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர், முதல்வர் அதிஷிக்கு எதிராக கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார். அதுவும் முதல்வர் வேட்பாளராக என்று கூறியுள்ளார். இது பா.ஜ.க. மத்தியில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, கெஜ்ரிவால் இல்லாத விசயம் ஒன்றை புரளியாக கிளப்புகிறார் என குற்றச்சாட்டாக கூறியதுடன், பொதுமக்களின் அறிவை அவர் சூழ்ச்சியாக கையாள பார்க்கிறார் என்றார். பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் யாரென கெஜ்ரிவால் முடிவு செய்ய முடியுமா? இதுபோன்று கூறுவதற்கு அவர் யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


