முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி. வெற்றியுடன் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆஷஸ் தொடர் நேற்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் ஹீதர் நைட் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். வியாட் ஹாட்ஜ் 38 ரன்களும், எமி ஜோன்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். 

மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆஷ்லே கார்டனர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிம் கார்த், அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் அலானா கிங் 2 விக்கெட்டுகளையும், டார்ஸி பிரௌன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 38.5 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

______________________________________________________________________________

இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்து வெளியேறினார். டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல், தாமஸ் மச்சாக்குடன் (செக்குடியரசு) மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தாமஸ் 6-3, 6-1 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய ஒரே வீரர் சுமித் நாகல் மட்டுமே ஆவார். அவரும் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து