எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந்தேதி முதல் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடக்கிறது. பொது பிரிவு வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரமும் 'டெபாசிட்' தொகையாக செலுத்த வேண்டும்.
சனி மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் 2-வது நாளாக நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. - 2ம் நாளில் 9 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளில் மனு செய்த 3 பேருடன் சேர்த்து ஈரோடு கிழக்கில் இதுவரை 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வருகிற16-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் 3-வது நாள் வேட்புமனு தாக்கல் கடைசி நாளான வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனு வாபஸ் பெற 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வருகிற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி, சித்தோட்டில் உள்ள அரசினர் என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


