எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று போகி பண்டிகையுடன் தொடங்கியுள்ளது. இன்று தைப்பொங்கல், நாளை மாட்டுப் பொங்கல், 16-ந்தேதி அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் புத்தாடை, கரும்பு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், வெளியூரில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு, தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட 6 நாட்கள் (ஜனவரி 14 முதல் 19-ம்தேதி வரை) தமிழக அரசு, தொடர் விடுமுறை அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


