எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டா ப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவிலிருந்து குழந்தைகளைத் தாக்கக் கூடிய எச்.எம்.பி.வி தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் வி.ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், பெண் குழந்தை காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளால் சில நாள்களுக்கு முன்பு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், குழந்தையின் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து சிறுமிக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னதாக புதுச்சேரியில் கடந்த வாரம் முதல் எச்.எம்.பி.வி தொற்று ஐந்து வயது சிறுமிக்குப் பதிவானதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமி பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினார். புதுச்சேரி நிர்வாகம் வைரஸின் சூழலில் அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்துள்ளது என்று இயக்குநர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


