எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு நடைபெறும் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும், பி.எச்டி. படிப்புக்கான தகுதித் தேர்வாகவும் 'யு.ஜி.சி. நெட்' தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான யு.ஜி.சி நெட் தேர்வு 2025-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்வு நடைபெற்று வருகிறது.
ஆனால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால், அதற்கான விடுமுறை நாட்களில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதினார். அதில், 'யு.ஜி.சி. நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடத்துவதை தவிர்த்து, வேறு நாட்களில் மாற்றியமைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று (ஜனவரி 15) நடைபெற இருந்த யு.ஜி.சி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்தது. மேலும் இன்று (ஜனவரி 16) நடைபெறும் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் மறுதேதியை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற இருந்த 17 பாடங்களுக்கான தேர்வுகள் வருகிற 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


