எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோரும் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அய்யன் வள்ளுவரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து மரியாதை செலுத்தினோம். உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்குமான பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் பெரும்புகழ் ஓங்கட்டும். மானுடம் தழைக்க குறள் நெறி காட்டும் பாதையில் நடைபோடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025