Idhayam Matrimony

மேலும் 100 பள்ளிகளுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழக அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழ்நாட்டில் 2022-2023, 2023-2024-ம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 2024-2025-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 100 பள்ளிகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீட செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு தேவையான சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக பசுமை பள்ளிக்கூடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 2022-2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுகளில் 71 பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.15 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 2024-2025-ம் கல்வியாண்டில் 100 பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 100 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ. 20 கோடியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து