எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய், உங்களது ஆதரவு, வாழ்த்துகள் மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றார். இந்த தொடரில் அஜித்தின் அணி, போர்ஸ்சே 992 பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது. அவரது அணிக்கு 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' விருது வழங்கப்பட்டது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கார் பந்தயத்தில் பங்கேற்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை அஜித் குமார் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான அந்த வீடியோவில், "கார் பந்தய கண்காணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துபாய் ஆட்டோட்ரோம் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. நான் என்னுடைய அஜித் குமார் ரேசிங் அணிக்கும் கடமைப்பட்டுள்ளேன். நாங்கள் உங்களது ஆதரவு, வாழ்த்துகள் மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள், உங்கள் அழகான குடும்பங்களை விரைவில் சந்திப்போம் என நம்புகிறேன். உங்கள் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று அதில் அஜித் குமார் பேசியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


