எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீவ், ரஷ்யா அதிரடி தாக்குதலில் இருந்து தப்பிக்க பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக உக்ரைன் மின்சாரத்தை துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை தொடங்கிய ரஷ்யா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. சமீப காலமாக உக்ரைனின் உள்கட்டமைப்புகளை ரஷ்யா தாக்குகிறது.
அவ்வகையில், ரஷிய படைகள் நேற்று உக்ரைனின் மின் உற்பத்தி மையங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு மையங்களை குறிவைத்து மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் ஹலுசென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைன் மக்களை எதிரி தொடர்ந்து பயமுறுத்துவதாகவும் அவர் கூறி உள்ளார். மக்கள் பாதுகாப்பாக, அந்தந்த பகுதிகளில் உள்ள தங்கு மிடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்களை அறிந்து அதனை பின் பற்றவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கார்கிவ், சுமி, போல்டாவா, சபோரிஜியா, டினிப்ரோ பெட்ரோவ்ஸ்க் மற்றும் கிரோவோஹ்ராட் ஆகிய பகுதிகளில், அரசு மின் நிறுவனமான உக்ரெனெர்கோ அவசரகால மின்வெட்டை அமல்படுத்தி உள்ளது. ரஷ்யாவால் ஏவப்பட்ட பல ஏவுகணைகளை உக்ரைனின் விமானப்படை கண்டறிந்து, மக்களுக்கு உரிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


