Idhayam Matrimony

பும்ராவுக்கு டிசம்பர் மாத ஐ.சி.சி சிறந்த வீரர் விருது

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

 துபாய் : டிசம்பர் மாதத்திற்கான  ஐ.சி.சி  சிறந்த பந்துவீச்சாளர்  விருதை இந்திய வீரர் பும்ரா வென்றார். 

ஐ.சி.சி. அறிவிப்பு...

ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது. சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் டேன் பீட்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சிறந்த வீரர் பும்ரா...

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் சராசரியாக 14 புள்ளி 22 என்று அளவில் சராசரி வைத்திருந்த பும்ராவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினார். இது போன்று மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸ் 4 விக்கெட் வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது. எனினும் மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பேட்டிங் சொதப்பினால், 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

நான்காவது வீரர் ...

இதன் மூலம் இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தால் அது மட்டும் இல்லாமல் உலக அளவில் சிறந்த பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றிருந்தார். இந்த தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 200 வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை கிடைத்தது.

கொண்டாட்டம்...

அது மட்டும் இல்லாமல் குறைந்த பந்துவீச்சு சராசரியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக தான் அவருக்கு சிறந்த வீரர்களுக்கான விருது கிடைத்திருக்கிறது. பும்ராவுக்கு கிடைத்த இந்த கௌரவத்தை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து