எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராஜ்கோட் : ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்த இந்திய பெண்கள்அணி இந்திய ஆடவர் அணியை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடரை வென்றது...
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இரு மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றது.
இந்தியா சாதனை...
இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
ஆண்கள் அணியை....
மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது. இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ரன்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


