எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், வரும் பிப்.9-ம் தேதி தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜன.16) தொடங்கி வைத்தார். மேலும், பார்வையாளர்கள் மாடத்தில் அவரது மகன் இன்பநிதியுடன் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்டு ரசித்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு உள்ளிட்ட பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து மதுரையில் இருந்து விமானம் மூலம் உதயநிதி சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி பார்த்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக இருந்தது. எல்லா வருடமும் அங்கு சென்று பார்த்திருக்கிறேன். சிறப்பான ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்த்தது நன்றாக இருந்தது.” என்றார்.
அமைத்துள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் எப்போது போட்டிகள் நடத்தப்படும் என்ற கேள்விக்கு, “தமிழக அரசு சார்பில் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் நடைபெறும் போட்டி குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். பிப்.9ம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம்.” என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


