எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலில் மணீஷ் சிசோடியா தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமானமணீஷ் சிசோடியா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நான் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும், அரவிந்த் கெஜ்ரிவாலின் சிப்பாயாகவும் ஜங்புரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். ஜங்புரா மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் அளித்த அன்பை இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சிக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். கல்வி, சுகாதாரம் மேம்பாடு மூலம் மக்களின் எதிர்காலத்திற்கு பங்களிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நான் எனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


