Idhayam Matrimony

மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம்: ஜல்லிக்கட்டு விளையாட்டில் அரசியலை புகுத்தக்கூடாது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      தமிழகம்
RBUdhayakumar 2024-12-22

 மதுரை, ஜல்லிக்கட்டு  விளையாட்டில் அரசியல் புகுத்தாமல் நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழர் திருநாளை தமிழர்களுக்கு ஏமாற்று திருநாளாக தி.மு.க. அரசு அமைத்துவிட்டது. இந்த தை திருநாளில் ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இங்கு ஊர் கமிட்டி, ஊர் பொதுமக்களை, மண்ணின் மைந்தர்களை ஒதுக்கிவிட்டனர். அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி ஜல்லிக்கட்டு விழாவாக அமைச்சர் மூர்த்தி நடத்தி வருகிறார். ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். அப்போதுதான் அந்த சாமிக்கு பெருமை. ஆனால் இன்றைக்கு அரசு எந்திரத்தை தி.மு.க. கட்சி எந்திரமாக வைத்து நடத்தி, ஊர் கமிட்டியை ஊர் எல்லையில் நிறுத்தி விட்டார்கள். வாடிவாசலில் தி.மு.க. கட்சிகளை வைத்து விழாவை தொடங்கி உள்ளார்கள். இது ஜல்லிக்கட்டு விழாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. ஜல்லிக்கட்டு மதிப்பை சிதைப்பதாக உள்ளது.

ஜல்லிக்கட்டு விழாவில் முறையாக பதிவு செய்யப்பட்ட உள்ளூர் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. இது குறித்து அனைத்து தரப்பினரும் பேசி இருக்கிறார்கள். ஆன்லைன் பதிவில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்பாடாமல் விளையாட்டில் அரசியல் புகுத்தாமல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து