Idhayam Matrimony

போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சி: ரவுடி பாம் சரவணன் மீது போலீசார் துப்பாக்கி சூடு

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      தமிழகம்
Gun 2023-10-05

சென்னை, காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.

பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பிறகு தலைமறைவாக இருந்து வந்தார். இதனால், அவரை காவல்துறை பல்வேறு வழக்குகளில் தேடி வந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதப்பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த பாம் சரவணனை நேற்று முன்தினம் இரவு கைது செய்த தனிப்படை போலீஸார் சென்னைக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு விசாரணை செய்த பின்னர் சென்னை எம்.கே.பி நகரில் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது, அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயன்று, பிடிக்க சென்ற எஸ்.ஐ. மீது சரவணன் கத்தியால் தாக்கியதாகவும், இதனால், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பாம் சரவணனிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், ஒரு பட்டாக்கத்தி மற்றும் 5 கஞ்சா பண்டல்களை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து