Idhayam Matrimony

கோவையில் யானை தாக்கி விவசாயி பலி

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      தமிழகம்
Suicide 2023 04 29

கோவை, கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் கூட்டமாகவும் மற்றும் ஒற்றை யானையாகவும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனை தடுப்பதற்காக வனத் துறையினரும் பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன் பாளையம் பழைய புதூர் பகுதியில் உள்ள மேட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி வேலுமணி (74) என்பவர் தோட்டத்திற்கு முன் புறம் உள்ள கேட்டை பூட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை அவரை தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் பெரியநாயக்கன் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் வேலுமணியின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து