எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மேலும் சிலரை சேர்க்க குறிப்பாக உள்ளூர் ஜாம்பவான்களை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரர்கள் திணறல்....
இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். குறிப்பாக விராட் கோலி தொடர்ந்து அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்து தோல்விக்கு ஒரு காரணமாய் அமைந்தார். மேலும் இப்படிப்பட்ட பந்துகளில் அவுட்டாவதை அவர் நீண்ட காலமாக கொண்டிருக்கிறார்.இதனால் விராட் கோலி இப்படி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் பந்துகளில் விக்கெட்டை பறிகொடுக்கும் வரை இந்திய அணியின் பயிற்சியாளர்களான கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் என்ன செய்கிறார்கள்? என்று முன்னாள் வீரர்களான கவாஸ்கர் மற்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்தனர்.
உள்ளூர் ஜாம்பவான்கள்...
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் மேலும் சிலரை சேர்க்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பேட்டிங் பயிற்சியாளராக கூடுதலாக உள்ளூர் ஜாம்பவான்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பயிற்சியாளர் குழுவில் காம்பீர் (தலைமை பயிற்சியாளர்), ரையன் டென் டோஸ்கேட், அபிஷேக் நாயர், மோர்னே மோர்கல் மற்றும் டி.திலீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


