எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், ஜன.21-ம் தேதி புதிய மாநில தலைவர் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ஜ.க கட்சியின் விதிமுறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் ஒருவருக்கு 2 முறை மாநில தலைவர் பதவி வழங்கலாம். அந்த வகையில், 2021-ம் ஆண்டு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவருடைய பதவிக் காலம் நிறைவடைகிறது.
தற்போது பா.ஜ.க கிளை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுக்கான தேர்தல்கள் முடிந்த நிலையில், புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜன.20-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிலக்கரி துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டு பா.ஜ.க மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பதவிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பா.ஜ.க தலைமைக்கு பரிந்துரைக்கு அனுப்பிவைக்கப்படும். அதில் ஒருவருக்கு பா.ஜ.க மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்படும். ஒருவர் 2 முறை தலைவராக இருக்கலாம் என்பதால் அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், ஹெச்.ராஜா, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோருக்கும் வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


