எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கான ஏற்பாடுகளை ஏகனாபுரத்தில் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விமான நிலைய அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூா் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் பரந்தூர் மக்களை சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் த.வெ.க கடிதம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் பரந்தூர் செல்வதற்கு ஜன.19 அல்லது ஜன.20ஆம் ஆகிய தேதிகளில் ஒன்றில் அனுமதி கேட்கப்பட்டிருக்கும் நிலையில் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அதற்கான ஏற்பாடுகளை ஏகனாபுரத்தில் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் முதல்முறையாக போராட்ட களத்திற்கு நேரடியாக செல்லவிருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


