முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறி விழுந்ததில் போப் பிரான்சிஸ் காயம்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      உலகம்
Pope 2023 06 17

Source: provided

ரோம் : போப் பிரான்சிஸ் கடந்த ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக  தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். இதனால் பெரும்பாலும் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி தனது படுக்கை அறையில் தவறி விழுந்ததில் அவரது கன்னத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது போப் பிரான்சிஸ் தவறி விழுந்தார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. கையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும், எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காயம் ஏற்பட்ட பகுதியில் கட்டு போடப்பட்டு இருப்பதாகவும் வாடிகன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக போப்பாண்டவர் தவறி விழுந்து காயமடைந்திருப்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து