எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : கிரிக்கெட்டின் கடவுள் என போற்றக்கூடிய சச்சின் டெண்டுல்கர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான்...
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013ஆம் ஆண்டில் தனது ஓய்வை அறிவித்தார். இதையடுத்து கிரிக்கெட் ஆல்-ஸ்டார் சீரீஸ், ரோட் சேப்டி சீரீஸ் உள்ளிட்ட சில தொடர்களில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், தற்போது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என கூறப்பட்டுள்ளது.
6 அணிகள் பங்கேற்பு
இத்தொடரில் இந்தியாவுடன் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன. இந்த தொடர், பிப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை, நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானம், ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானம் மற்றும் ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர், இந்த மூத்த வீரர்களுக்கான போட்டியின் ஆணையாளராக உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


